
17 வயது மன நலம் குன்றிய இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி வயசு 49
இவர் கடந்த 12/ 2/23 அன்று மனநலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு
புகார் வந்தது
அந்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை அனைத்து
மகளிர் காவல் நிலைய போலீசார் பால்பாண்டியை கைது செய்தனர்
மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் மன நலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த பால்பாண்டிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்