சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் இன்று கட்டுமான பணியில் ஈடுபட்டவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்தார்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியில் ஈரோடு சேர்ந்த பழனிச்சாமி (55) என்பவர் மேல் மாடியில் பணியாற்றும் போது உயர் மின்சாரம் தாக்கி கட்டிடத்தின் மாடியில் கீழே விழுந்ததார்.
பலத்த படுகாயமடைந்த பழனிச்சாமியை சிவகாசி அரசு மருத்துவமனையிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழப்பு நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது