
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்திற்கு நிகரான ஒரு திருநாள் உண்டோ என்றால் இல்லை! நம்மாழ்வாருக்கு நிகரான ஒருவர் உண்டோ என்றால் இல்லை!இன்று ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகம் நாளாகும்.
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்- உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு – தென் குருகைக்குண்டோ
ஒருபார் தனிலொக்கும் ஊர்.”
- என்று நம்மாழ்வாரைப் போற்றி வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகள் (உபதேசரத்தினமாலை, 15) பாடியுள்ளார்.
- அதாவது, வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்திற்கு நிகரான ஒரு திருநாள் உண்டோ என்றால் இல்லை! நம்மாழ்வாருக்கு நிகரான ஒருவர் உண்டோ என்றால் இல்லை! இவர் அருளிச்செய்த திருவாய்மொழிக்கு நிகரான ஒரு பிரபந்தம் உண்டோ என்றால் இல்லை! அவர் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்கு சமமான ஊரும் இல்லை, என்று போற்றிப் பாடியுள்ளார் .
- ஸ்ரீ மணவாள மாமுனிகள். மேலும், “சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில்குருகை நாதன் அவதரித்த நாள்” -சீர்மை மிகுந்த வடமொழி வேதத்தைத் திராவிடமாக (செந்தமிழ்) செய்தருளின யதார்த்தவாதியாய் அழகிய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் தோன்றிய திருநாள் அல்லவோ இது! என்றும் போற்றியுள்ளார் மணவாள மாமுனிகள். இன்று ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகம்.