சொத்து தகராறில் ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது
விருதுநகர் அருகே சொத்து தகராறின் போது தடுக்க வந்த ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரட்டுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது சகோதரி லதா. இருவருக்குமிடையே சொத்து பிரச்சனை மற்றும் தந்தையை பராமரிப்பது தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், லதா, கடந்த 2016 டிச.,18இல் தனது அப்பாவிற்கு சொந்தமான பொருட்களை வாகனத்தில் கொண்டு செல்ல முயன்றுள்ளார். அப்போது கண்ணன் மற்றும் அவரது மனைவி செந்தாமரை செல்வி மற்றும் கடம்பூரைச் சேர்ந்த சுப்புராஜ் ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.
அப்போது வாகன ஓட்டுநர் பாலாஜி அதை தடுக்க முயன்றுற்றார். இதையடுத்து பாலாஜியை மூவரும் சேர்ந்து bட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கானது, விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.