- Ads -
Home சற்றுமுன் வறுத்தெடுக்கும் வெய்யில்: மேலும் 4 டிகிரி அதிகரிக்கும்!

வறுத்தெடுக்கும் வெய்யில்: மேலும் 4 டிகிரி அதிகரிக்கும்!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெய்யில் நிலவரம் வருமாறு:-

தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் வெய்யில் வறுத்தெடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெய்யிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்றும் வெய்யில் வறுத்தெடுத்தது. பிற்பகல் முதல் மாலை வேளை வரை நகரின் சில இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை. சில நிமிடங்கள் பெய்த லேசான மழையும் சூட்டைக் கிளப்பிவிட்டதால்,, மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

அதிகரிக்கும் வெப்பநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.

ALSO READ:  தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13 நகரங்களில் வெய்யில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.44 டிகிரி வெய்யில் கொளுத்தியது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெய்யில் நிலவரம் வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் – 104.18 டிகிரி – (40.1 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் – 105.44 டிகிரி – (40.8 செல்சியஸ்)
கடலூர் – 103.64 டிகிரி – (39.8 செல்சியஸ்)
ஈரோடு – 101.12 டிகிரி – (38.4 செல்சியஸ்)
கரூர் – 103.1 டிகிரி – (39.5 செல்சியஸ்)
மதுரை – 104.36 டிகிரி – (40.2 செல்சியஸ்)
நாகை – 102.38 டிகிரி – (39.1 செல்சியஸ்)
பாளையங்கோட்டை – 104 டிகிரி – (40 செல்சியஸ்)
தஞ்சை – 102.2 டிகிரி – (39 செல்சியஸ்)
திருப்பத்தூர் – 101.84 டிகிரி – (38.8 செல்சியஸ்)
திருச்சி – 103.28 டிகிரி – (39.6 செல்சியஸ்)
திருத்தணி – 105.08 டிகிரி – (40.6 செல்சியஸ்)
தூத்துக்குடி – 101.3 டிகிரி – (38.5 செல்சியஸ்)
வேலூர் – 102.2 டிகிரி – (39 செல்சியஸ்)

ALSO READ:  கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு: லாரிகள் ஸ்டிரைக்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version