
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உறவினர்கள் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராஜேஷ்(23). இவர் செங்கோட்டை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை காலையில் பணிக்காக தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நகராட்சி அலுவலகத்திற்குள் வந்தார். அப்போது அவரை இரண்டு நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் இருந்த ராஜேஷின் உறவினர்கள் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.