
அமலாக்கத் துறையினரால் கைதாகி நீதிமன்றக் காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு விசாரணை சிறைவாசி எண் 1440 வழங்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளதால், சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் எண் மற்றும் சிறைக் கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்குப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடுதான் அனுமதிக்கப் படுவார்களாம்.