
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் திருஆடிப்பூர திருவிழா
முதல் நாள் நாளை தொடங்குகிறது
12.07.2023 ஆனி மாதம் 27ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல்10.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அங்கூரம். தேங்காய் தொட்டுநியமனம் பெறும்
மாலை 5.30 மணிக்கு மேல் 6,30 மணிக்குள் தனுசு லக்னத்தில் மிருத்ஸங்கிரஹணம்- திருப்பூரநந்தவனம் நடைபெறும்.
கொடியேற்றம் (துவஜாரோஹணம்)
14.07.2023 ஆனி மாதம் 29 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெறும்.
ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெறும் நிலையில் தேருக்கு நாள்செய்து ஆடிப்பூரத் திருப்பணிகள் தேர் அலங்கார பணிகள் கோயில் முன்பு அலங்கார பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட விழா இந்த மாதம் நடக்கிறது. இதனை முன்னிட்டுதேர் அலங்கார பணிகள் நடந்து வருகின்றன.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர தினத்தன்று தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு அதற்காக நாள்செய்யும் பணிகள் இரண்டு மாதத்திற்கு முன்பு தொடங்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழாவை சிறப்பாக நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஜூலை 14-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 22-ம் தேதி காலையில் நடைபெறும்
திருவிழா அறிவிப்பை முன்னிட்டு தேருக்கு நாள்செய்யும் நிகழ்ச்சி மே மாதம் நடைபெற்றது. அதன்படி, சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் தேரின் மேல் அலங்காரம் செய்வதற்கான மரத்தூண்கள் நடப்பட்டன. அதைத் தொடர்ந்து, பதினாறு சக்கர வண்டிச் சப்பரத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து தேரை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.