
சிவகாசி அருகே கேப் வெடி தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது இரண்டு பேர் பலியாயினர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தாயில்பட்டியில் சண்முகையா என்பவருக்கு சொந்தமான ஆர் எஸ்ஆர் கேப் வெடி தொழிற்சாலை இயங்கி வருகிறது இந்த ஆலையில் தொழிலாளர்கள் காலையில் வழக்கம் போல் கேப் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் தரையில் உராய்வு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு பானு , முருகேஸ்வரி ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்தில் உயிர் பலி மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.