ஆடி அமாவாசை முன்னிட்டு, ஆக.16-ம் தேதி புதன்கிழமை, மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. ஆடி மற்றும் தை புரட்டாசி மாத அமாவாசை முன்னிட்டு, பிதுர்களுக்கு, பொதுக்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
அதன்படி, நாளை புதன்கிழமை ஆடி அமாவாசை முன்னிட்டு, மதுரை நகரில் வைகை ஆற்றங்கரை மற்றும் கோவில்களில் தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வதால், பல நன்மைகள் கிட்டும் என நம்பிக்கையாகும். மேலும், ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதின் மூலம் இன்னல்கள் விலகி சுப காரியங்கள் வீட்டில் நடைபெறும் என்பது மக்களுடைய நம்பிக்கையாகும். அன்றைய தினம் வீடுகளில் காக்கைக்கு, அன்னமிட்டு சிவன் மட்டும் பெருமாளுக்கு விளக்கேற்றினால், பல சுப காரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தானங்களான காய்கறி தானம், வஸ்தர தானங்கள் ஆகியவை செய்வதன் மூலமும் சாபங்கள் விலகும் என்பது முன்னோர்களின் வாக்காகும்.
மதுரை நகரில் அண்ணா நகர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திலும், வைகை விநாயகர் ஆலயத்திலும் ,மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயத்திலும், மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கியம் ஆலயத்திலும், அம்மாவாசை அன்று தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது.
வருகின்ற 16. 8. 23. புதன்கிழமை ,ஆடி அமாவாசை முன்னிட்டு, மதுரை நகரில் கோயில்களில் தர்ப்பணம் நடைபெறுகிறது. மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், காலை 8.30 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரையிலும், மதுரை அண்ணா நகர் வைகை காலனி வைகைவனை ஆலயத்தில் காலை 7:15 மணி முதல் 8 15 மணி வரையிலும், மதுரை அண்ணா நகர், யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், காலை 6. 15 மணி முதல் 7 15 மணி வரையிலும், தர்ப்பணம் செய்து வைக்கப்படும். தர்ப்பணத்துக்கு வருவோர், கருப்பு எள்ளுப்பாக்கெட் ஒன்று, வாழைப்பழம் 2 ,
தர்ப்பணம் செய்ய தாம்பாளம் ஒன்று, டம்ளர் ஒன்று கொண்டு வர வேண்டும். ஆங்காங்கே ,கோயில் வாசல்களில் புஷ்பம் மற்றும் விளக்கு விற்பனை செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு 99 428 400 69 மற்றும் 87 60 919188 ஆகிய எண்களின் தொடர்பு கொள்ளலாம்