சனாதன தர்மம் குறித்து உதயநிதி புரிந்து பேச வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் செப்டம்பர் 7 தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நேற்று ஆறாம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் வைத்து துவங்கியது
இதில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பாதயாத்திரை தெக்கரதேவி கீழிறது வீதி பஸ் நிலையம் சின்ன கடை வீதி வழியாக ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை வந்து அடைந்தது அங்கு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார் முன்னதாக அவர் மதியம் 12 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்
தொடர்ந்து வட பத்திர செயலர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்துவிட்டு மணவாள மாமுனிகள் மடத்திற்கு சென்று அங்கு 24 வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராமானுஜ ஜுயர் சுவாமிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடையே பேசும்போது…
உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சிலிருந்து பின் வாங்க மாட்டேன் என்ற கருத்திற்கு, பின்வாங்காமல் இருப்பது நல்லது. அப்பொழுதுதான் ஒரு மாற்றம் வரும்.
சனாதனத்தை வேர் அறுக்க வேண்டும் என்றால் தமிழக அரசின் சின்னத்தை மாற்ற வேண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை மாற்றுவாரா என கேள்வி?அப்படியே மாற்றினாலும் மாற்றித்தான் பார்க்கட்டும்.
எதுவும் தெரியாமல் புரியாமல் படிப்பறிவு இல்லாமல், சொல் புத்தி, சுய புத்தி இல்லாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிட்டு நான் பேசியது சரி எனக் கூறும் நபரிடம் நான் என்ன சொல்வது.
சனாதன தர்மம் என்பது உதயநிதி ஸ்டாலின் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோவிலில் வந்து 30 பிரசுரங்களை படித்துள்ளார்.இதும் ஒரு வகையான சனாதான தர்மம் தான்.
சனாதன தர்மம் என்றால் பிராமணர்கள் தான் என்று 1949 முதல் திமுக மற்றும் திராவிட கழகத்தினர் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களை அரவணைத்து செல்லக்கூடியது சனாதன தர்மம்.
2022-ல் தான் ஒரு கிறிஸ்தவர் எனக் கூறியவருக்கு சனாதனம் தர்மம் குறித்து பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது.
உதயநிதி கிறிஸ்தவ மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தால் முதல் கண்டன குரலாக எனது குரல்தான் இருக்கும். சனாதன தர்மத்தையும் அப்படித்தான் இருக்கும்.
குடியரசு தலைவர் தேர்தலின்போது பழங்குடியின இனத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவிற்கு ஓட்டு போடாமல் , அவரை எதிர்த்து போட்டியிட்ட பிராமணருக்கு ஓட்டு போட்ட இவர்கள் எப்படி சானாதனம் குறித்து பேச முடியும்.
ஒரே நாடு ஒரே தேர்தலை 1971இல் கருணாநிதி ஆதரித்தார். கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரவாக எழுதியிருப்பார். அப்பா புத்தகத்தையே ஸ்டாலின் படிப்பதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தினுடைய கட்டாயம்.நிச்சயமாக நடந்தே தீரும்.
உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன் 2024 மற்றும் 2026 தேர்தலில் சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா?திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதானத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் -மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம்.
தேர்தல் வந்தாலே அப்பாவும் மகனும் வேல் தூக்குவார்கள்.
சனாதனம் என்பது வாழைப்பழத்தின் தோல் மாதிரியும் இந்து மதம் என்பது வாழைப்பழம் மாதிரியும் வாழை பழத்தின் தோலை நீக்கிட்டு பழத்தை மட்டும் சாப்பிட வேண்டும் என்பது தான் இந்து மதம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
இந்து அறநிலையத்துறையில் இருந்து சேகர்பாவிற்கு கொடுக்கப்படும் வாழைப்பழங்களில் தோலை நீக்கி விட்டு பழத்தை மட்டும் அனுப்பி வைக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார்.
பேட்டியின் போது பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி மாநிலத் துணைத் தலைவர் கோபால்சாமி மாவட்டத் தலைவர் சரவணன் துரை என்ற ராஜா மற்றும் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் உடன் இருந்தனர்
அண்ணாமலையின் பாதயாத்திரியின் போது வழிநெடுக்க ஏராளமான பொதுமக்கள் இரண்டில் நின்று ஆர்வத்துடன் பார்த்தனர் கோவிலுக்கு முன்பு அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது அப்பொழுது அவர் கிருஷ்ண ஜெயந்தி நினைவுபடுத்த வகையில் உறியடித்து உற்சாகமூட்டினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் அண்ணாமலையின் பாதயாத்திரியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.