திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பனை ஓலை கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி:
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்திர உறுதி மையமும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமும் இணைந்து நடத்திய பனை ஓலை கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி நடைபெற்றது.
தாய் வாழ்த்துடன் பயிற்சி இனிதே தொடங்கியது.
இந்த நிகழ்வில், விருப்பமுள்ள மாணவர்கள் பங்கு பெற்றனர். கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்லபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வாழ்த்துரை வழங்கினார். பயிற்சியின் தொடக்க நிகழ்வில், திருவண்ணாமலை கலசபாக்கத்தைச் சார்ந்த பனை ஓலை கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர் மற்றும் பயிற்சியாளர் பார்த்தசாரதி, பயிற்சி பற்றி உரையாற்றினார். திண்டுக்கல் செம்பட்டியைச் சார்ந்த இயற்கை விவசாய வல்லுனர் யுவராஜ் சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் நன்றி உரையாற்றினார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை ஓலை பொருட்கள் என்பதை உணர்த்தும் விதமாகவும் சிறு தொழில் தொடங்கும் விதமாகவும் சிறு பெட்டி, கீ செயின், பொம்மை போன்ற பனை ஓலை கைவினைப் பொருட்களை பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு செய்து காட்டி பயிற்சி வழங்கினர்.
நிறைவாக தேசிய கீதம் பாட, பயிற்சி இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வை, இயற்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் மாணிக்கவாசகர் யுதிஷ்ரன் தொகுத்து வழங்கினார்.