
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. IRCTC இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஜன. 11 முதல் 17-ம் தேதி வரை பயணம் செய்ய, செப்.13 முதல் 19-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்-ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால், சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பே திட்டமிட்டுள்ளவர்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வர்.
அடுத்த ஆண்டு ஜன.14 ஞாயிறு அன்று போகி துவங்கி, 15ல் பொங்கல், 16ல் மாட்டுப் பொங்கல், 17ல் காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் நாளை முதல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதாவது, ஜன. 11ல் பயணம் செய்ய நாளையும், ஜன.12க்கு வரும் 14லும்; ஜன.13க்கு வரும் 15ம் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.