மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கோவில் முன்பாக செவ்வாய் சாற்றுதளுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை கோவிலிலிருந்து வைகை ஆற்றிற்கு சென்று பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்கினி சக்தி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று இரவு கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும் நாளை காலை கோவில் மண்டபத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு மற்றும் நாளை இரவு அம்மனுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இரவு, கிராமத்தின் சார்பாக வள்ளி திருமணம் எனும் நாடகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, வியாழன் அன்று காலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்று பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று, திருவிழா நிறைவு பெறும்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, மேலக்கால் கிராம கமிட்டியாளர்கள் முதன்மை காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.
வீடியோ செய்தி: