- Ads -
Home சற்றுமுன் பழனி அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால நாணய கண்காட்சி!

பழனி அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால நாணய கண்காட்சி!

இந்த கண்காட்சியில், சேர, சோழ, பாண்டியர் மற்றும் குப்தர் அரச கால பழங்கால நாணயங்கள், ஆங்கிலேயர், முகலாயர் காலத்து நாணயங்கள்

#image_title
palani museum nanaya kankatchi

திண்டுக்கல் பழனி அரசு அருங்காட்சியகத்தில், நாட்டின் வரலாறு சார்ந்த புகைப்படங்கள், உலோக பொருட்கள், மண் குடுவைகள், கற்கால கருவிகள் என பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. அதன்படி, அருங்காட்சியகத்தில் பழங்கால நாணய கண்காட்சி தொடங்கியது.

இந்த கண்காட்சியில், சேர, சோழ, பாண்டியர் மற்றும் குப்தர் அரச கால பழங்கால நாணயங்கள், ஆங்கிலேயர், முகலாயர் காலத்து நாணயங்கள் மற்றும் சுதந்திரத்துக்கு முன்பு வெளியிடப்பட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் பகுதி குற்றச் செய்திகள் சில…

வடமதுரை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது.

திண்டுக்கல், வடமதுரை அருகே உள்ள குளத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30). கூலித்தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாயார் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிர் காவல் துறையினர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்த நிலையில், குளத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

ALSO READ:  தீபாவளி ஸ்பெஷல்: சென்னையில் இருந்து குமரி, செங்கோட்டைக்கு ரயில்கள்!

நத்தத்தை சேர்ந்த இளைஞர் போக்சோவில் சிறையில் அடைப்பு!

திண்டுக்கல், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை பார்த்து கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த நத்தம், உலுப்பக்குடி பகுதியை சேர்ந்த பிரசன்னா(21). என்பவரை, சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ரவிச்சந்திரன், மதுரை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version