விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருஉருவசிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாலை அணிவித்து மரியாதை …
தென்மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுபயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி. அவர்கள் இன்று விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்
சுற்றுபயணத்தில் விருதுநகர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர் என். ரவி அவர்கள் காமராஜரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதை தொடர்ந்து அங்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டு காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து தெரிந்து கொண்டார்.
தமிழக ஆளுநர் அங்கு இருந்த வருகை பதிவிட்டு கோப்பில் கையெழுத்திட்டார். ஆளுநருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.