
விருதுநகர் மாவட்டம் கங்கர் சேவல்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கர் சேவல்பட்டி கிராமத்தில் சிவகாசியைச் சேர்ந்த ராஜேந்திரராஜா என்பவருக்கு சொந்தமான விக்டோரியா என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இதில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது மாலை நேரத்தில் பணி முடியும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அறையில் தரையில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.அந்த அறையில் பணி புரிந்து கொண்டிருந்த கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகிய மூன்று தொழிலாளர்கள் தீ விபத்து ஏற்பட்டு பலத்த படுகாயம் அடைந்தனர் .
உடனடியாக அங்கு இருந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில்.
தீவிர தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர் மேலும் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .
இதில் கணேசன் மற்றும் ராஜா இரண்டு பேரும் 100% சதவீத காயத்துடன் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து ஆலை உரிமையாளர் உள்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு.ஆலையின் போர் மேன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெம்பக் கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கங்கர்சேவல் என்ற இராஜேந்திரராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் கணேசன், முத்தம்மாள், ராஜா ஆகிய மூன்று பேர் காயமடைந்த விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆலையின் உரிமையாளர் இராஜேந்திர ராஜா, ஆலையின் போர் மேன் சக்கையா, மேலாளர் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு செய்த ஆலங்குளம் போலீஸார் போர்மேன் சக்கையாவை கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் ஆலையின் உரிமையாளர் மற்றும் மேலாளரை தேடி வருகின்றனர்.