
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பாக பயின்று பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் ராம.கதிரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பதக்கங்கள் வென்ற பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஆளுநர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்தனார் பிறந்த ஊரான ம.ஆதனூர் கிராமத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் பங்கேற்றார். பின்னர் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் புதன்கிழமை மாலை நடைபெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழக 85வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

ஆளுநருக்கு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்த மார்க்சிஸ்ட் கம்யு கட்சியினர் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
நந்தனார் குருபூஜை விழாவில் பங்கேற்க காட்டுமன்னார்கோயிலுக்கு ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மா.ஆதனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நந்தனார் என்ற திருநாளை போவார் நாயனார் பிறந்து வசித்து வந்தார். ம.ஆதனூர் கிராமத்தில் புதன்கிழமை காலை நந்தனார் குருபூஜை விழாவிற்கு தமிழ் சேவா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.மேலும் ஆயிரம் நபர்களுக்கு பூனூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் ஆளுநர் ஆர். என், ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் வருகைக்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோவில் பெரிய குளம் அருகில் பிரகாஷ் தலைமையில் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.