நவ 1முதல் பொதிகை சிலம்பு மயிலாடுதுறை விரைவு ரயில்கள் முழுமையாக செங்கோட்டை முதல் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
எதிர் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வண்டிகள், இடையில் என்ஜின் மாற்றம் ஏதுமின்றி,மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்பட உள்ளன. அதற்கு அடுத்த வாரம் நெல்லை – மேட்டுப்பாளையம் மற்றும் செங்கோட்டை -மதுரை வண்டிகளும் மின்சார என்ஜின் மூலமாக ஓட்டப்பட உள்ளன. கேரளப் பகுதிகளில் மின்சார இணைப்பு பணிகள் இன்னும் முடிவடையாததால், கொல்லம், சென்னை கொல்லம் மதுரை குருவாயூர் மதுரை வண்டிகள் வழக்கம் போல மதுரை வரை டீசல் என்ஜின் மூலமாக இயக்கப்படும். எர்ணாகுளம் வேளாங்கண்ணி எர்ணாகுளம் வழக்கம் போல் இயங்கும்
வரும் அக்.31ம் தேதியில் இருந்து சென்னை எழும்பூர் – செங்கோட்டை வரும் வண்டி எண் 12661 – பொதிகை எக்ஸ்பிரஸ் மின்சார எஞ்சினில் இயக்கப்படுகிறது. நவ.1ம் தேதியில் இருந்து செங்கோட்டை – சென்னை எழும்பூர் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் வண்டி எண் 12662 மின்சார எஞ்சினில் முழுவதுமாக இயக்கப்படுகிறது. இதுவரை மதுரையில் டிசல் எஞ்சின் மாற்றப்பட்டு வருகிறது. அந்த நேரம் இனி மிச்சமாகும். இது குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதுபோல், சென்னை – செங்கோட்டை வரும் வண்டி எண் 20681 சிலம்பு எக்ஸ்பிரஸ் நவ.1ம் தேதியில் இருந்தும், வண்டி எண் 20682 சிலம்பு எக்ஸ்பிரஸ் வரும் நவ.2ம் தேதியில் இருந்தும் மின்சார இஞ்சினில் இயக்கப்பட வுள்ளது. இதுநாள் வரை இந்த ரயிலுக்கு டீசல் எஞ்சின் விருதுநகரில் மாற்றப்பட்டு வருகிறது. இனி இது செங்கோட்டை – சென்னை முழுதும் மின்சார எஞ்சினில் இயக்கப்படும். இதனை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், வண்டி எண் 16847 மயிலாடுதுறை – செங்கோட்டை மற்றும் வண்டி எண் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் நவ.1 மற்றும் நவ.2 ஆகிய தேதிகளில் இருந்து மின்சார இஞ்சினில் இயக்கப்படும்.
அடுத்த கட்டமாக, வண்டி எண் 06504 / 06503 மதுரை – செங்கோட்டை , செங்கோட்டை – மதுரை ரயில்கள், வரும் நவ.8ம் தேதி முதல், மின்சார இஞ்சினில் இயக்கப்படும்.
வண்டி எண் 06029/06030 திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் மற்றும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ரயில் ஆகியவை வரும் நவ.10, நவ.11 ஆகிய தேதிகளில் மின்சார இஞ்சினில் இயக்கப்படும்.
இதுபோல், வண்டி எண் 16101/16102 – சென்னை – கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், இதுவரை விருதுநகர் ரயில் நிலையத்தில் மின்சார இஞ்சின் மாற்றப்பட்டு வருகிறது. இது இனி மதுரை ரயில் நிலையத்தில் மின்சார / டீசல் எஞ்சின்கள் மாற்றப்பட்டு இயக்கப்படும். இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க… தற்போது சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எட்டு மணி நேரத்துக்குள் வந்தடைகிறது. அதைவிட அதிகம் நிறுத்தங்களுடன் இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் சுமார் பத்து மணி நேரத்தில் தென்காசியை வந்தடைகிறது என்பது தென்காசி ரயில் பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அது போல் இதுவரை வந்ததில் இருந்து, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் வந்துவிடலாம் என்பது, ராஜபாளையம் சிவகாசி வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் அம்சம் தான்!