ATS அமைக்கப்பட்டதின் சரியான நோக்கத்தை தமிழக அரசு
தெளிவு படுத்தவில்லை, இருப்பினும்
பயங்கரவாத தடுப்பு பிரிவு ஏற்படுத்தியுள்ளதை வரவேற்கிறோம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:
தென் பாரதத்தில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம், நக்சல் பயங்கரவாதம் தொடர்ந்து தலைதூக்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு மிக முக்கியமான காரணம் பயங்கரவாதத்தை தமிழக அரசியல் லாபத்திற்காக மூடி மறைப்பதே.
அதே சமயம் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின் நாசகார செயலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது தமிழ்நாடு தான். இது கடந்த நாற்பது ஆண்டுகளாக வெளிப்படையாகவே தெரிய வந்தாலும் அதற்கான சரியான கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. பயங்கரவாதின் மீதான முழுமையான பார்வையை காவல்துறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் செயல்பாடு குறித்தான விவரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அதற்கான நிதி சுமார் 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் கட்டமைப்பு குறித்து குறிப்பிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற பல கொலை, குண்டுவெடிப்பு வழக்குகள் முறையாக நடத்தி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்காததும் தமிழகத்தில் பயங்கரவாம் தலைதூக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எனவே இதற்காக தனியாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது இது போன்ற குறைகளை களைவதுடன் பயங்கரவாதத்தின் செயல்பாடு குறித்து நுண்ணறிவு பிரிவு சேகரிக்கும் செய்திகளைக் கொண்டு ஒட்டுமொத்தமாக பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
கேரளா, மகாராட்டிரம் உள்பட 4 மாநிலங்களில் இத்தகைய பிரிவு ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது. எனவே நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு (A.T.S.) அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து தங்கள் கிடைக்கும் பயங்கரவாதம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டு பயங்கரவாதிகள் எந்த வகையிலும் தப்பிக்காமலும் செயல்படாமலும் முற்றிலுமாக தடுக்க வேண்டும்.
தமிழக காவல்துறையை ஒருதலைப்பட்சமாக செயல்பட வைத்து காவல்துறைக்கு அவபெயரை ஏற்படுத்தி வருகிறது ஆளும் திமுக அரசு.
அதுபோல் அரசியல் குறுக்கீடு இல்லாமல் புதிதாக துவக்கியுள்ள இந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவை (ஏ.டி.எஸ்) செயல்பட அனுமதிக்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக ஏ.டி.எஸ். பிரிவின் செயல்பாட்டை முடக்காமல் தேச நலனுக்காக, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.