வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் மத்திய அரசு தன்னுடைய வேலையை செவ்வனே செய்யும் போது முதலமைச்சர் இந்தியா கூட்டணி குறித்த மீட்டிங்கில் உள்ளார். நாளையா தேர்தல் நடக்கிறது- என விருதுநகரில் முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருநெல்வேலி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை விருதுநகரில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,முதற்கட்டமாக மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மத்திய பகுதிக்கு சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதாகவும்,அரிசி, பருப்பு,எண்ணெய்,சானிட்டரி பொருட்கள் உள்ளிட்ட 16 பொருட்கள் அடங்கிய 1000 பேக்கேஜிங் அனுப்பியுள்ளதாகவும்,நாளை முதல் 3 நாட்களுக்கு பிற பொருட்களான துணிகள் வர இருப்பதாகவும், அதையும் மக்களுக்கு வழங்க இருப்பதாகவும் தொடர்ந்து 3 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அண்ணாமலை மழை தகவல் தாமதமாகத்தான் தெரிவிக்கப்பட்டது,இருந்த போதிலும் வெள்ள நிவாரணங்களை மத்திய அரசை எதிர்பார்க்காமல் அறிவித்து இருப்பதாக தமிழக முதலமைச்சர் சொன்னதற்கு பதிலளித்த அண்ணாமலை, வானிலை ஆய்வு மையத்தை வளப்படுத்த சூப்பர் கம்யூட்டருக்கு ரூ 10 கோடி என்னவாயிற்று என்றும் இங்கே மக்கள் துயரத்தில் இருக்கும் போது டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்துவதும்,இங்கே சேலத்தில் பாதி அமைச்சர்கள் சென்று இளைஞரணி மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவது என திமுக அரசு எந்த ஒரு ஐடியாவும் இல்லாமல் இருப்பதாகவும்,மூத்த அமைச்சர்கள் பலபேர் இருக்க உதயநிதியை நிவாரணத்திற்கு அனுப்பியதுடன் அவர் சினிமா இயக்குநரை உடன் வைத்துக்கொண்டு டேக் ரெடி என்பது போல் செயல்படுவதாகவும், அவருக்கு பேரிடர் மேலாண்மை பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார்.
மேலும் மத்திய அரசு இல்லாமல் நிவாரணத்தில் தமிழக அரசு ஒன்னும் செய்து விட முடியாது என்றும் மத்திய அரசு 24 மணி நேரத்தில் 5 ஹெலிகாப்ட்டர்ஸ் ட்ரோனியர் விமானங்கள்,மி7 போன்ற ஹெலிகாப்ட்டர்ஸ் ,2 ஆர் களம்.என்.டி.ஆர்.எப் படைகள் 7 மற்றும் கோஸ்ட் கார்டு 6 இவையெல்லாம் மத்திய அரசு களத்தில் இறக்கி விட்டுள்ளது என்றும்,
மேலும் சூலூர் விமானப்படை தளத்தை நிவாரண தளமாக அறிவித்து அங்கிருந்து வேலை நடைபெற்று வருவதாகவும், டெல்லி தமிழ்நாடு பவனில் இருந்து கொண்டு முதலமைச்சர் பேட்டி கொடுத்தால் போதுமா? களத்தில் அல்லவா நிற்க வேண்டும் என்றார்.
வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் மத்திய அரசு தன்னுடைய வேலையை செவ்வனே செய்யும் போது முதலமைச்சர் இந்தியா கூட்டணி குறித்த மீட்டிங்கில் உள்ளார்.மீட்டிங்கை ஒரு வாரம் தள்ளி வைக்கலாம் அல்லது காணொளி காட்சி மூலம் கலந்து கொள்ளலாம் என்றார்.முக்கிய தலைவர்கள் எல்லாம் டெல்லியில் இருந்தால் இங்கே ஆளுங்கட்சி யார் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது என தமிழக முதல்வர் பாஜகவுக்கு எதிராக அரசியல் பண்ணனும் என்ற முழு நேர வேலையாக முதல்வர் வைத்திருக்கிறாரே தவிர மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது என்றார்.
மேலும் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் சில பேர் சொல்ல சொல்லத்தான் பாஜக கட்சி வளரும் எனவும் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களில் நோட்டாவுக்கு கீழ் வாக்கு வாங்கியது என விமர்சனம் செய்த அண்ணா மலை நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்கு வரக்கூடாது என எல்லா எம்.பிக்களும் ஒத்து கொண்டார்கள் என்றார்.
அதே போல் ராஜ்ய சபாவின் தலைவரும் துணை குடியரசு தலைவர் போல் ஒரு எம்.பி மிமிக்ரி செய்வதை ராகுல் காந்தி வீடியோ எடுத்து சிரிப்பது என்பது அரசியல் கட்சி தலைவரின் மாண்புக்கு அழகா என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 39 தொகுதிகளை வெல்லும் என்றார்.