தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை அறிவிப்பும் வெளியானது.
சென்னையில் அதிகன மழை பெய்யும் என ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் கனமழை மட்டுமே பெய்யும் என்று அடுத்து வெளியான தகவல் சென்னை மக்களுக்கு நிம்மதியை தந்தது. அதே நேரத்தில் சென்னையில் மழை தொடர்ந்து ஒரு வாரம் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஜன.8 இன்று விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கனமழை காரணமாக, திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில், நாகபட்டினம், கீழ்வேளூர் தாலுகாக்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. வேதாரண்யம், திருக்குவளை தாலுகாகளில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று கனமழை அறிவிக்கப் பட்டுள்ளது.
வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கில் தலா ஒரு சுழற்சி நிலவுகிறது. இதனால், வங்கக்கடலின் தென் மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல், 10ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வரும், 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை:
கடந்த 24 மணி நேரத்திற்கான வானலை தொகுப்பு:
வடகிழக்கு பருவமழை தென்தமிழக உள் மாவட்டங்களில் மிகத்தீவிரமாக உள்ளது.
தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சிவகாசி (விருதுநகர்) 11,
சீர்காழி (மயிலாடுதுறை), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 7,
பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) 6,
காரைக்கால் (காரைக்கால்), அண்ணாமலை நகர் (கடலூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), காக்காச்சி (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), பாபநாசம் (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 5,
செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), சிதம்பரம் (கடலூர்), ராஜபாளையம் (விருதுநகர்), நன்னிலம் (திருவாரூர்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 4,
ஆண்டிபட்டி (தேனி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), எழுமலை (மதுரை), பெரியகுளம் (தேனி), பரங்கிப்பேட்டை (கடலூர்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), மரக்காணம் (விழுப்புரம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கின்னக்கோரை (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கே.எம்.கோயில் (கடலூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), வலங்கைமான் (திருவாரூர்), உசிலம்பட்டி (மதுரை) தலா 3,
வைகை அணை (தேனி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கடனா அணை (தென்காசி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), நீடாமங்கலம் (திருவாரூர்), ஆண்டிபட்டி (மதுரை), கருப்பாநதி அணை (தென்காசி), அரண்மனைப்புதூர் (தேனி), திருப்போரூர் (செங்கல்பட்டு), குந்தா பாலம் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), வீரபாண்டி (தேனி), புதுச்சேரி (புதுச்சேரி), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), கெத்தை (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), களக்காடு (திருநெல்வேலி), வாடிப்பட்டி (மதுரை), முத்துப்பேட்டை (திருவாரூர்), கொடவாசல் (திருவாரூர்) தலா 2,
கும்பகோணம் (தஞ்சாவூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), சோத்துப்பாறை (தேனி), திருவாரூர் (திருவாரூர், மேல் பவானி (நீலகிரி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), லால்பேட்டை (கடலூர்), வனமாதேவி (கடலூர்), SRC குடிதாங்கி (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), சண்முகாநதி (தேனி), பேரையூர் (மதுரை), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), போடிநாயக்கனூர் (தேனி), புவனகிரி (கடலூர்), பாண்டவரடி (திருவாரூர்), ஆழியார் (கோயம்புத்தூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), வானூர் (விழுப்புரம்), மணல்மேடு (மயிலாடுதுறை), கடலூர் (கடலூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), குப்பணம்பட்டி (மதுரை), அவலாஞ்சி (நீலகிரி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தலா 1.