- Ads -
Home சற்றுமுன் பாஜக.,தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி: பிரதமர் மோடி உறுதி!

பாஜக.,தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி: பிரதமர் மோடி உறுதி!

நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்த போது, பிரதமரைப் பார்த்து

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று, பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட, ‘என் மண் என் மக்கள்’ – நடைப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி பல்லடத்தில் நடைபெற்றது. அதில்கலந்து கொண்டு பேசினார் பிரதமர் மோடி. பின்னர் மாலை மதுரைக்குச் சென்று, மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். இரவு மதுரையில் தங்கிய அவர், தொடர்ந்து இன்று காலை  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தூத்துக்குடி புறப்பட்டார்.  

இன்று காலை மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். 

தூத்துக்குடியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முழுமையான தமிழாக்கம் … https://dhinasari.com/latest-news/302053-pm-modi-ji-in-thuthukkudi-speech.html

பின்னர் தூத்தூக்குடியில் இருந்து  பிரதமர் மோடி நெல்லை வந்தடைந்தார். காரின் படிக்கட்டில் நின்று தொண்டர்களைப் பார்த்து கையசைத்தவாறு பிரதமர் மோடி சென்ற போது, வழி நெடுகிலும் தொண்டர்கள்,  மோடி மோடி என உற்சாக கூச்சலிட்டு  அவரை வரவேற்றனர். 

ALSO READ:  தை அமாவாசை தர்ப்பணம்; மந்திரங்கள் - செய்யும் முறை!

அதன் பின்னர் நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்த போது, பிரதமரைப் பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். பொதுக்கூட்ட மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் அமர்ந்திருந்தனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசத் தொடங்கிய பிரதமர் மோடி,  “அனைவருக்கும் வணக்கம்” என தமிழில் கூறி, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்!  அல்வாவை போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள் என்ற போது, மாநாட்டுப் பந்தலில் இருந்த தொண்டர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள். 

பிரதமர் மோடியில் பேச்சில் இருந்து… 

  • தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் பாஜகவின் பக்கம் நிற்பதை நான் பார்க்கிறேன்.
  • பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.
  • தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
  • உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம்.
  • தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.
  • பாஜக தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி.
  • மாற்று எரிசக்தி துறையில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது.
  • நாடு ஒரு புதிய எண்ணத்தோடு பணியாற்றி வருகிறது. இதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும்.
  • உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.
  • இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது
  • தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கி உள்ளனர்.
  • பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.
  • 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இன்று அது 1 கோடியாக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் இன்று 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது.
  • உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் மூலம் தமிழக பெண்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
  • இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால், தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும், இது மோடியின் உத்தரவாதம்.
  • தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள்.
  • மக்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது.
  • உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள்.
  • நான் இதை தொடர விட மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.
  • பல ஆண்டு காத்திருப்புக்கு பின் அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது.
  • அயோத்தி ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
  • காங்கிரசும், திமுகவும் நாட்டை பிரிக்கின்றன.
  • தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை ம.பி.யில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.
  • தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது.
  • கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.
  • மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது.
  • மோடியை மீறி இந்தியா மீது யாரும் கை வைக்க முடியாது.
  • தமிழகத்தில் தி.மு.க. இனி இருக்காது, எங்கு தேடினாலும் கிடைக்காது.
  • வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு, வளர்ச்சியடைந்த தமிழகம் மிக அவசியம்.
  • நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது.
  • நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய இடங்களில் சூரிய மின்சக்தி திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
  • வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.
  • விருதுநகரில் பிரதம மந்திரி ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது
  • ‛‛ தமிழகத்தில் இனி தி.மு.க.,வைத் தேடினாலும் கிடைக்காது”
ALSO READ:  திருப்பரங்குன்றம் மலையைக் காக்க... பிப்.4ல் இந்து முன்னணி போராட்டம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version