- Ads -
Home சற்றுமுன் செங்கோட்டையில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

செங்கோட்டையில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

செங்கோட்டையில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
 செங்கோட்டை மேலபஜார் வாகைமரத்திடலில் வைத்து நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு நகரத்தலைவா் ராமர் தலைமைதாங்கினார். தென்காசி மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவா் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், நகரத்துணைத்தலைவர் முருகையா, நகர மகளிரணி தலைவா் முத்துலெட்சுமி, ஆகியோர் முன்னிலைவகித்தனா். தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட பொதுச்செயலாளா் ராஜீவ்காந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து நகரத்தலைவா் இராமர் தலைமையில் தேசபிதா மகாத்மா காந்தியின் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னா் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர சிறுபான்மை பிரிவு தலைவா் முகம்மதுசித்திக், எஸ்சி,எஸ்டி பிரிவு நகரத்தலைவா் சிவன், நகர்த்துணைத்தலைவா்கள் காதர்அலி, கோதரிவாவா, நகரப்பொதுச்செயலாளா்கள் சுடலைமுத்து. இசக்கியப்பன், சுப்பிரமணியன், நகரச்செயலாளா்கள் நடராஜன், சுடலையாண்டி, வார்டு தலைவா்கள் தங்கம், திருமலைக்குமார், நாகூர்மைதீன், வார்டு உறுப்பினா் வேல்சாமி, ஜேம்ஸ், நகர சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் பூபதி, சேக்முகம்மது, வாவாகனி, முகம்மதுசர்புதீன், பெரியபிள்ளைவலசை கிராமத்தலைவா் சாய்பு உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகரப்பொருளாளா் சங்கரலிங்கம் நன்றி கூறினார். 
ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா!
Gobi Kannan

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version