- Ads -
Home சற்றுமுன் செங்கோட்டை அருகே உள்ள ஆய்க்குடி பேரூராடசியில் வரும் காப்போம் மருத்துவ முகாம்

செங்கோட்டை அருகே உள்ள ஆய்க்குடி பேரூராடசியில் வரும் காப்போம் மருத்துவ முகாம்

செங்கோட்டை அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சியில்  வரும் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் ஆய்க்குடி பேரூராட்சியில்  கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சாம்பவர்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில்  உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து தென்காசி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் கோவிந்தன் உத்தரவுபடி தமிழ்நாடு அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த சிறப்பு முகாமில் ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார்  வட்டாரமருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி மருத்துவ அலுவலர் முத்துபிரகாஷ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் துணைத் தலைவர் மாரியப்பன் வார்டு உறுப்பினர்கள் புணமாலை
 விமலா ராணி ஆகியோர் முன்னிலை வைகித்தனர்
  முகாமில் மகப்பேறு மருத்துவம் பொதுநல மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் பல்  மருத்துவம் கண் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது
 மேலும் ரத்த பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை கர்ப்பிணி தாய்மார்களுக்கு   ஸ்கேன்  இசிஜி மற்றும் காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகன மூலம் ஆய்வு பரிசோதனைகள் நடைபெற்றது முகாமில்  மருத்துவ அலுவலர்கள்   மருத்துவர்  மலர்க்கொடி பொதுநல மருத்துவர் . மாரீஸ்வரி மகப்பேறு மற்றும் ஸ்கேன் பரிசோதனை  மற்றும் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சீத்தாராமன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர் சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன்  கல்யாணசுந்தரம் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர் மற்றும் ஏனைய சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்
 முகாமில் ஆய்க்குடி பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை  பரிசோதனை மருத்துவ ஆலோசனைகள்  கர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மருந்து மாத்திரைகள் பெற்றுச் சென்றனர் முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version