- Ads -
Home சற்றுமுன் டேக்வாண்டோ போட்டியில் வென்ற மாணவனுக்கு கடையநல்லூர் எம்.எல்.ஏ., பாராட்டு!

டேக்வாண்டோ போட்டியில் வென்ற மாணவனுக்கு கடையநல்லூர் எம்.எல்.ஏ., பாராட்டு!



செங்கோட்டையில் தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் 2ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவனை கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா  வாழ்த்து தெரிவித்தார்.

 செங்கோட்டை விசுவநாதபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து, கருமாரி தம்பதியினரின் மகன் கவின்ஹரீஷ்குமார் இவர் அந்த பகுதியில் உள்ள எம்எம்.அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் ஆகஸ்ட் மாதம் 17. 18ஆம் தேதிகளில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 20224-2025ஆம் ஆண்டிற்கான  14வயதுக்குட்பட்ட  இளையோருக்கான நடந்த டேக்வாண்டோ போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தார். மேலும் தமிழக அளவில் நடந்த போட்டியில் மாநிலத்தின் முதல் வகுப்பில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.



இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா வெற்றி மாணவர் மற்றும் கலந்து கொண்ட மாணவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.



நிகழச்சியில் பயிற்சியாளா்கள் நாராயணசர்மா, ராணிசந்திரா சமூக ஆர்வலா் ஜாகீர்உசேன் மாணவ, மாணவியா்களின் பெற்றோர், ஆசிரிய பெருமக்கள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதனை தொடா்ந்து மாணவர்களை திறந்த ஜீப்பில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பள்ளி வளாகத்தில் வைத்து மாணவர்கள், ஆசிரியா்கள், சமூக ஆர்வலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version