- Ads -
Home அரசியல் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி! அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி! அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

இதை அடுத்து நிபந்தனைகள் அடிப்படையில் மொத்தம் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

#image_title
#image_title

தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் அரசுக்கு சில கேள்விகளையும் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு வரும் 6ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளில் நேற்றைய விசாரணையின் போது 42 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தமிழக அரசும், போலீசாரும் கண்ணாமூச்சி ஆடுவதாக கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும், நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும், தி.மு.க., பவள விழாவுக்கு மட்டும் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கியது எப்படி என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.

ALSO READ:  ஜயந்தி விழா: மதுரை பகுதியில் தேவர் சிலைக்கு மரியாதை!

ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி முடிவு எடுத்து இன்று தெரிவிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 42 இடங்களுடன் கூடுதலாக மேலும் 10 இடங்களுக்கு அனுமதி தரப்படுவதாகவும், 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசின் சாபில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து நிபந்தனைகள் அடிப்படையில் மொத்தம் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, கொள்கை மாறுபாடு கொண்ட மக்கள் வசிக்கும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி மறுக்கக் கூடாது. நிபந்தனைகளுடன் 6 இடங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 58 இடங்களிலும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எந்தப் புதிய நிபந்தனைகளையும் விதிக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஆர்.எஸ். எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுக்கக்கூடாது என்று தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

ALSO READ:  11ம் ஆண்டில் ‘மன் கி பாத்’: ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றி மக்களை எச்சரித்த பிரதமர் மோடி!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version