- Ads -
Home அரசியல் ‘சிலையில் எழுதப்பட்ட வாசகம் அப்படி..!’ கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்!

‘சிலையில் எழுதப்பட்ட வாசகம் அப்படி..!’ கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்!

அது குறித்து கேள்வி எழுப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யும் பாசிஸப் போக்கை திமுக., அரசு கையாண்டு வருவதற்கு கண்டனம் எழுப்பப் பட்டது.

திருச்சி, ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் சிலையை அகற்றுதல் தொடர்பாக கருத்தைக் கூறிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எதிராகப் பதிவு செய்திருந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 

தமிழக அரசின் அங்கமான ஹிந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் ராஜகோபுரத்துக்கு முன் எதிர்ப்புறத்தில், கடவுளை நம்புபவன் முட்டாள் என்றும், பலவாறாக ஹிந்து மதத்தை அவமதித்தும் அவதூறாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சிலையை நிறுவி, அதன் கீழ் இந்த வாசகங்களை வைத்தது தமிழக அரசு.

ஆலயத்தை நிர்வகிக்கும் அரசு, ஆலயத்தின் மூலம் வருமானம் ஈட்டும் அரசு, அதே  ஆலயத்துக்கு பக்தர்கள் அதிகம் பேர் வரவேண்டும் என்று விரும்பி அழைத்து அவர்களிடம் இருந்து வசூல் வேட்டையை நடத்தும் அரசு, அதே ஆலயத்துக்கு முன் அந்த ஆலயத்தின் கடவுளை அவமரியாதை செய்து அவதூறு செய்யும் கருத்துகளையும் எழுதி வைத்திருப்பதற்கு ஆன்மிக அன்பர்கள் பலர் வெகுகாலமாக எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். நியாயப்படி பார்த்தால், தங்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கோயிலுக்கு எதிரான கருத்துகள் என அரசுதான் அந்தச் சிலையை அகற்றியிருக்க வேண்டும், அல்லது அதை நிறுவியவர்கள் மீது அரசு சார் அறநிலையத்துறை வழக்கு தொடுத்திருக்க வேண்டும். 

ALSO READ:  செங்கோட்டையில் ஜனசேவா டிரஸ்ட் சார்பில் இலவச புத்தாடை, இனிப்பு வழங்கல்!

ஆனால், அது குறித்து கேள்வி எழுப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யும் பாசிஸப் போக்கை திமுக., அரசு கையாண்டு வருவதற்கு கண்டனம் எழுப்பப் பட்டது.

இதையும் படிங்க: கனல் கண்ணன் கைது- கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி பிதுக்கும் செயல்!

குறிப்பாக, இந்து முன்னணி அமைப்பின் சார்பில்,  சென்னை மதுரவாயலில் கடந்த வருடம் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடந்த இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழா, பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வாசலில் கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலை உடைக்கப்படும் நாள்தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்றார். 

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் குமரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ALSO READ:  Ind Vs Ban Test: சேப்பாக்கத்தில் கில், பந்த், அஷ்வினின் அசத்தல் ஆட்டம்!

இதையும் படிங்க: கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாத சர்வாதிகாரி அரசு: இந்து முன்னணி விமர்சனம்!

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனல் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “கோயில் வாசலில், கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களுடன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள சிலையை காவல் துறையினர் அகற்றியிருக்க வேண்டும். சிலையை வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்குப் பதில் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” இன்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கோயிலுக்கு எதிரில் ஆத்திகர்கள் குறித்து சிலை பீடத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் காரணமாகவே மனுதாரர் அவ்வாறு பேசியிருக்கிறார் எனக் கூறி, கனல் கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்க: எந்தத் தகுதியின் அடிப்படையில்… சிலை வைக்கப்பட்டுள்ளது?!

evr statue in srirangam

ALSO READ:  முதல் முறையாக செங்கோட்டையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்!
ரம்யா ஸ்ரீ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version