மக்கள் வரிப்பணத்தை கிறிஸ்தவ நிர்வாகத்திற்கு தேவையில்லாமல் தாரை வார்க்கும் மாவட்ட நிர்வாகத்தின் செயலை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது – என்று, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர், A.K.போஸ்பாண்டியன் அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கை:
நெல்லை மாவட்ட நிர்வாகமே! அரசு பொருட்காட்சி மைதானம் என மாநகராட்சி அலுவலகம் எதிரில் ஒன்று இருக்கும்போது தனியார் கிறிஸ்தவ டயோசிஷன் இடத்தில் அரசு பொருட்காட்சி அமைத்ததன் காரணம் என்ன?
வழக்கமாக நெல்லையப்பர் தேரோட்டத்திற்கு தானே அரசு பொருட்காட்சி நடத்தப்படும் சம்பந்தமே இல்லாமல் இப்போது நடத்தப்படுவதன் மர்மம் என்ன ?
பொருட்காட்சி நடைபெறும் இடத்தை சுற்றிலும் கிறிஸ்தவ மதமாற்ற விளம்பரங்கள் ஜொலிக்கிறதே
கேளுங்க தரப்படும் என கிறிஸ்தவ பாடல் ஒளிபரப்பாகிறது. மாவட்ட மக்கள் தொடர்பு துறையா? மதமாற்ற துறையா ?
சபாநாயகர் அப்பாவு அவர்கள் நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவ நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துகிறாரா ?
அரசு விழாக்கள் அனைத்தும் கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபத்தில் மட்டுமே நடைபெறுவதன் நோக்கம் என்ன ?
கிறிஸ்தவ டயோசீசன் நிர்வாகத்துக்கு வாடகை வருமானத்தை வாரி வழங்கும் நோக்கமா ?
நேருஜி கலையரங்கம் மாநகராட்சி வர்த்தக மையம் என அரசு கட்டடங்கள் இருக்கும் போது கிறிஸ்தவ CSI நூற்றாண்டு மண்டபத்தில் மட்டும் அரசு விழாக்கள் நடத்தப்படுவதன் காரணம் என்ன ?
நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவராஜ்ஜியம் நடைபெறுகிறதா?