- Ads -
Home சற்றுமுன் திருப்பரங் குன்றத்தில் விநாயகர் கோயில் இடித்து அகற்றம்! போராடிய இந்து இயக்கத்தினர் கைது!

திருப்பரங் குன்றத்தில் விநாயகர் கோயில் இடித்து அகற்றம்! போராடிய இந்து இயக்கத்தினர் கைது!

விநாயகர் திருக்கோவிலை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலின் சுற்றுச்சுவர் முழுவதையும்

#image_title
#image_title

மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்ற முயன்ற அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் முன்னணி மற்றும் ஹனுமன் சேனா கட்சியை சேர்ந்த 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கிரிவலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக ஆக்கிரமிப்பு கிரிவலப்பாதை மற்றும் சுற்றுப் பகுதிகளில் எடுத்து வந்த நிலையில், இன்று சன்னதி தெருவில் உள்ள திருப்பரங்குன்றம் நுழைவாயில் உள்ள கல்யாண விநாயகர் திருக்கோவிலை அகற்ற மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இன்று காலை முற்பட்டனர்.

கல்யாண விநாயகர் கோவிலை அகற்ற முயன்ற அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் , இந்து முன்னணி பாஜக மற்றும் ஹனுமன் சேனா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடமும் , பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடமும், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  IND Vs Aus 3rd Test: தோல்வியைத் தவிர்க்க போராட்டம்!

வெகுநேரம் காவல் துறையினர் மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம், ஆக்கிரமிப்பு அகற்றுவதாக எடுத்துக் கூறியும் அங்கிருந்து செல்லாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏழுக்கும் மேற்பட்ட பாஜக, இந்து முன்னணி மற்றும் ஹனுமன் சேனா கட்சி நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

அதன் பின்னர், ஆக்கிரமிப்பில் உள்ள கல்யாண விநாயகர் திருக்கோவிலை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலின் சுற்றுச்சுவர் முழுவதையும் அகற்றினர். திருப்பரங்குன்றம் கோவில் நுழைவாயில் முழுவதும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version