சென்னை செண்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில்!
சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை இடையே அரக்கோணம், காட்பாடி(வேலூர்), சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, தென்காசி வழியாக குளிர்சாதன சிறப்பு ரயில்.
தென்காசி ராஜபாளையம் வழியாக திருநெல்வேலி தாம்பரம் திருநெல்வேலி சிறப்பு சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் -செங்கோட்டை இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில் பணிகளும் பொதுமக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில் சிறப்பு ரயிலை இயக்குமாறு தெற்கு ரயில்வேக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே வருகின்ற 03/11/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னைக்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.
இந்த ரயிலானது மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 04 மணி 10 நிமிடங்களுக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும். மறு மார்க்கமாக திங்கள்கிழமை மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியை செவ்வாய்க்கிழமை காலை 5 மணி 10 நிமிடங்களுக்கு வந்தடையும்.
இந்த ரயில் இயக்கப்படும் இரு மார்க்கங்களிலும் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம் , ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் ,அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம் ,திண்டிவனம் மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30/10/2024 மற்றும் 6/11/24 புதன்கிழமை சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 07:00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை
வண்டி எண் 06005 ஏசி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன 15 மூன்றடுக்கு ஏசி பெட்டிகளாக இயங்கும்.
சென்னையில் இருந்து விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் சங்கரன்கோவில் தென்காசி வர உள்ள மக்கள் இந்த ரயிலை அதிகமாக பயன்படுத்தலாம்.
சென்னை செண்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் முனையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.