செங்கோட்டையில் தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்.
செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் கடந்த கொரோனா தொற்று காலத்திலிருந்து ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள்
வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு இன்றுவரையில் வழங்கி வருகிறது.
மேலும் பல்வேறு சமூக செயல்பாடுகள் மூலம் சிறந்த சேவையின் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 5ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் ஏழை,எளிய ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வருகிறது. இந்தாண்டு நடந்த புத்தாடை வழங்கும் நிகழ்ச்சிக்கு யோகா பயிற்சி ஆசிரியா் செல்வக்குமார் தலைமை தாங்கினார்.
நகராட்சி சுகாதார அலுவலா் ரெங்கநாதன், தென்காசி ரோட்டரி கிளப் (சக்தி)தலைவி விஜயலெட்சுமி, பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கோமதிநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அரசு பள்ளி ஆசிரியை அமுதா குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி விவேகானந்தா ஆசிரம
ஸ்தாபகர் அகிலானந்த மகராஜ் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கி பயனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலா்கள் ஆவுடையப்பன், தங்கராஜ், மற்றும் தாயின் மடியில் அறக்கட்டளையினுடைய நிர்வாகிகள் உறுப்பினா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.