செங்கோட்டையில் ஜனசேவா டிரஸ்ட் சார்பில் இலவச புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கல்.
செங்கோட்டை வம்பளந்தான் முக்கு அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வைத்து ஜனசேவா டிரஸ்ட் சார்பில் ஏழை,எளிய, ஆதவரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஜனசேவா டிரஸ்ட் ஆலோசனை குழு கௌரவத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி .மீனாகுமாரி, நகர்மன்ற உறுப்பினா் செண்பகராஜன், சமூக ஆர்வலா் ஹரிஐயர் ஆகியோர் முன்னிலைவகித்தனா். டிரஸ்ட் நிறுவனத் தலைவா் நாணய கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேசன் நிறுவனத் தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட துணைத்தலைவா் வழக்கறிஞா் பால்ராஜ் சமூக சேவகர் ஓவிய ஆசிரியர் முருகையா லதா முருகையா. .சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜனசேவா
டிரஸ்ட் செயலாளர் ஐயப்பன் நன்றியுரையாற்றினார்.