இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2025-ஆம்
நாளினைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம், 2025-க்கான பணிகள் நடைபெற உள்ளது.
இதற்காக, மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (29.10.2024) வெளியிடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 27,03,835.
இதில் ஆண் வாக்காளர்கள்: 13,28,854 பெண் வாக்காளர்கள்: 13,74,690, மூன்றாம் பாலின் வாக்காளர்கள்: 291.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பதிவு செய்வதற்கு மற்றும் ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-6, இந்திய கடவுச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவு செய்வதற்கு படிவம்-6A, வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பதற்கு படிவம் 6B. ஏற்கனவே பதிவு செய்துள்ள பெயரினை நீக்கம் செய்வதற்கு அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் சேர்ப்பு குறித்து ஆட்சேபணை தெரிவிக்க படிவம்-7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும், தொகுதி மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கும், நகல் அட்டை பெறுவதற்கும், படிவம்-8-இல் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
ஜனவரி 1, 2025 -அன்று அல்லது அதற்கு முன்பே 18 வயது பூர்த்தி அடைந்த வாக்குச்சாவடி பகுதியில் சாதாராணமாக வசித்து வரும் இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
29.10.2024 முதல் 28.11.2024 வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி மையங்கள் / வட்டாட்சியர் அலுவலகங்கள் / மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து நேரடியாக அளிக்கலாம் அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.
கைப்பேசியில் வாக்காளர் உதவி எண் என்ற செயலி (Voters Helpline Mobile App) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23.11.2024 (சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களில், வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். மேலும் ,விவரம் மற்றும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண் 1950.
பெறப்படும் விண்ணப்பப் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025- அன்று .
சிவகங்கையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.
சிவகங்கை மாவட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட
அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, 27.03.2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024-க்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலினை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வெளியிட்டு தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி மையம் விரிவுபடுத்துதல் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களின் ஆலோசனை மற்றும் பொதுமக்களின் ஆலோசனை பெற்று அதனடிப்படையில்,
இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி திட்டப்பணிகள் மேற்
கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் வரைவு வாக்காளர்
பட்டியலை இன்று வெளியிடப்படுகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் 27.03.2024 அன்று சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 இறுதி வாக்காளர் பட்டியலின் படி 5,83,171 ஆண் வாக்காளர்களும், 6,05,159 பெண் வாக்காளர்களும், 55 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் ஆக மொத்தம் 11,88,385 வாக்காளர்கள் இருந்தனர்.
28.03.2024 முதல் 08.10.2024 வரை மொத்தம் 28,496 மனுக்கள் பெறப்பட்டு இதில் 26,185 மனுக்கள் அனுமதிக்கப்பட்டு 2,311 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
28.03.2024 முதல் 08.10.2024 வரை தொடர் திருத்தத்தில் 12,744 ஆண் வாக்காளர்களும், 13,424 பெண் வாக்காளர்களும், 17 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் ஆக மொத்தம் 26,185 வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்திருத்தத்தின்போது 1,191 ஆண் வாக்காளர்களும் 1,119 பெண் வாக்காளர்களும் மற்றும் 01 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,311 வாக்காளர்கள் பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 184-காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 1,55,833 ஆண் வாக்காளர்களும், 1,61,179 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 52 வாக்காளர்களும் என மொத்தம் 3,17,064 வாக்காளர்களும், 185-திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,46,191 ஆண் வாக்காளர்களும்1,52,472பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 03 வாக்காளர்களும் என மொத்தம் 2,98,666 வாக்காளர்களும்,
186-சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் 1,47,545ஆண் வாக்காளர்களும், 1,53,078 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 01 வாக்காளர்களும் என மொத்தம் 3,00,624 வாக்காளர்களும், 187-மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் 1,38,467 ஆண் வாக்காளர்களும், 1,43,430 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 04 வாக்காளர்களும் என மொத்தம் 2,81,901 வாக்காளர்களும் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து, 5,88,036 ஆண் வாக்காளர்களும், 6,10,159 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 60 வாக்காளர்களும் என ஆகமொத்தம் 11,98,255 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் மறுசீரமைப்புக்கு முன்னர் 1357 வாக்குச்சாவடிகள் இருந்தன. மறுசீரமைப்புக்கு பின் 184-காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 348 வாக்குசாவடிகளும், 185-திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 335 வாக்குசாவடிகளும், 186-சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் 356 வாக்குசாவடிகளும், 187-மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் 325 வாக்குசாவடிகளும் என மொத்தம் 1364 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பதிவுகளைத் திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் தொடர்பாக 29.10.2024 முதல் 28.11.2024 வரை மனுக்கள் பெறப்படும். மனுக்களை அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் நேரடியாகவோ அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அளிக்கலாம்.
மேலும், 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெறும் வகையில் சிறப்பு முகாம்களும் நடைபெறும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ளவும், புதிய வாக்காளர்கள் இருப்பின் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் இருப்பின் திருத்தம் செய்யவும். தங்களது குடும்பத்தில் காலஞ்சென்ற நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பின் அவர்களது பெயர்களை நீக்கவும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.செல்வசுரபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துக்கழுவன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.மேசியாதாஸ், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், துணை வட்டாட்சியர் (தேர்தல்), அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.