பார்த்திபன் மகள் திருமண விழாவில் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்து மகிழ்ந்தனர்.
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்-சீதா தம்பதியின் இளைய மகள் கீர்த்தனா-அக்ஷய் திருமணம் நேற்று நடந்தது.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் என்பதால் இருவரும் வேறுபாடுகாட்டாமல் ஒன்றாக இருந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.
மணமக்களை வாழ்த்துவதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்த போது, ரஜினிகாந்தும் வந்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.இதுபோல் வைகோவும் ரஜினியும் கட்டித் தழுவி நலம் விசாரித்தனர். 3 பேரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்து மகிழ்ந்தனர். அரசியலில் வேறுபாடு இருந்தாலும் பொது இடத்தில் பண்புடன் நடந்து கொண்டனர்.