மதுரை மாவட்டத்திலுள்ள கோயில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயம், தென்கரை மூல நாத சுவாமி ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், அழகர் கோவில் சோலைமலை முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் , மதுரை அண்ணாநகர் தாசில்தா நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர் ஆலயம்,
வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம் ஆகிய கோயில்களில் கந்தசஷ்டி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடைபெற்றது.
பக்தர்கள் முருகனுக்கு, பால், இளநீர், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை அடுத்து கோவில் நிர்வாகம் சார்பில், பக்தருக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முருகன் கோவிலில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கந்த சஷ்டி முன்னிட்டு சூரசம்காரம் நடைபெற்று நடைபெற்றது.
இதே போல தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்தில், சூரசம்காரம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.