- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் மதுரை கோயில்களில் பிரதோஷ வழிபாடு! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

மதுரை கோயில்களில் பிரதோஷ வழிபாடு! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சுவாமி, அம்பாள், ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதை, ஏராளமான பக்தர்கள்

#image_title
pradosha vazhipadu in madurai temples

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாதர் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில், பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர், நரசிம்மர், சனீஸ்
வரலிங்கம் , பிரளய நாதர் சுவாமி ஆகியோருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாள், ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதை, ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

இவ்விழாவில், தொழில் அதிபர் எம். வி. எம். மணி, கவுன்சிலர்கள் எம். மருதுபாண்டியன், எம். வள்ளி மயில், கோவில் நிர்வாக அதிகாரி இளமதி, கணக்கர் சி பூபதி, வசந்த் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  திருப்பரங் குன்றத்தில் விநாயகர் கோயில் இடித்து அகற்றம்! போராடிய இந்து இயக்கத்தினர் கைது!

இதே போல, சோழவந்தான் அருகே தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்திலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயத்திலும், மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர் ஆலயத்திலும், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வர ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும், ஜூபிலி டர்ன் ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும் தாசிலா நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும் ஜெ.ஜெ. நகர் விநாயகர் ஆலயத்திலும், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்திலும் பிரதோஷத்தை முன்னிட்டு, சிவபெருமான் அம்பாளுக்கு சிறப்பு அபிஷே அர்ச்சனைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.

ரவிச்சந்திரன், மதுரை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version