- Ads -
Home சற்றுமுன் குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது. 

அதன் எட்டாவது பகுதி…

வினா – நான் சிறப்பாக இல்லை.

மோதிஜி – நீங்கள் கடியாரத்தைப் பார்க்கிறீர்கள்!!!

வினா – இல்லை இல்லை இல்லை.  நான் என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை.  இதில் நான் சிறந்தவன் இல்லை, ஓகே.  உங்கள் வாழ்க்கையில் உங்கள் அனுபவத்தில் நீங்கள் இந்தியாவில் பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்திருப்பீர்கள்.  அவற்றில் ஒன்று 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரங்கள்.  நவீன இந்திய வரலாற்றின் மிகச் சவாலான பக்கங்களில் இவையும் ஒன்று.  குஜராத்தின்இந்து முஸ்லிம் குடிமக்களுக்கிடையே கலவரங்கள் மூண்ட போது, சுமார் 1000 பேர் உயிரிழந்தார்கள்.  இது மதரீதியான அழுத்தங்களின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தியது.  நீங்கள் கூறியபடி அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தீர்கள்.  திரும்பிப் பார்க்கையில், அந்தக் காலத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன?  இதையும் கூற வேண்டும், இந்தியாவின் சுதந்திரமான உச்சநீதிமன்றம் இருமுறை, 2012 மற்றும் 2022இல் வன்முறையில் உங்கள் பங்கு இல்லை எனத் தீர்ப்பளித்தது.  அந்த காலத்தில் நடந்த கலவரத்திலிருந்து பொதுவாக நீங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன?

ALSO READ:  உபவாசம் ஒரு தவம்: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

மோதிஜி – என்ன புரிந்து கொள்கிறேன் என்றால், முன்னரே நீங்கள் கூறியபடி, இந்த விஷயத்தில் நான் வல்லுனர் இல்லை நான், நேர்காணலை நான் சரியாகச் செய்கிறேனா இல்லையா என்ற குழப்பம் உங்களிடம் ஏற்பட்டது.  எனக்கு என்ன படுகிறது என்றால், நீங்கள் கணிசமாக பாடுபட்டிருக்கிறீர்கள்.  கணிசமான ஆய்வு செய்திருக்கிறீர்கள்.  மேலும் அனைத்தையும் நுணுகிப் பார்க்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.   இது உங்களுக்கு ஒரு கடினமான வேலை, என்று, என்று, நான் கண்டிப்பாக கருதவில்லை ….. 

நீங்கள் எத்தனையோ, போட்காஸ்ட் செய்திருக்கிறீர்கள்….. நான் நம்புகிறேன், நீங்கள் தொடர்ந்து நல்லபடியாகவே செயல்படுகிறீர்கள் என்று.  மேலும் நீங்கள், மோதியிடம்… வினா எழுப்புவதற்கு பதிலாக நீங்கள், பாரதத்தின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முயல்கிறீர்கள் என்று நான் உணர்கிறேன்.   அந்த வகையில் நான் கருதுகிறேன், சத்தியத்தைத் தெரிந்து கொள்ளூம் உங்கள் முயற்சியில் நேர்மை புலப்படுகிறது.  இந்த முயற்சிக்காக நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  அந்த பழைய விஷயங்கள் குறித்து நீங்கள் கேட்டீர்கள்.  ஆனால் நீங்கள்… 2002… அந்த குஜராத்தின்…. கலவரங்கள், அதன் முந்தைய நாட்கள் பற்றிய… ஒரு, 12-15 ஆண்டுகள் பற்றிய காட்சியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.  அப்போது உங்களால் கணிக்க முடியும், அப்போது, என்ன நிலை இருந்தது என்று.  

இப்போது, டிசம்பர் 24… 1999.  அதாவது 3 ஆண்டுகள் முந்தைய விஷயம்.  காட்மண்டுவிலிருந்து தில்லிக்கு வந்து கொண்டிருந்த விமானம், அதைக் கடத்தி ஆஃப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கொண்டு சென்றார்கள்.  பாரதத்தின் பலநூறு பயணிகளைப் பிணையாகப் பிடித்தார்கள்.  பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல்.  மேலும் ஒரு, புயல் இதோடு சேர்ந்து கொண்டது.   11 செப்டெம்பர் 2001, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது மிகப்பெரிய தாக்குதல் தொடரப்பட்டது. 

இது மீண்டும் ஒருமுறை… உலகத்தை, கவலையில் ஆழ்த்தியது ஏனென்றால்,  இவை அனைத்தையும் செய்தவர்கள் ஒரே வகையானவர்கள்.  அக்டோபர் 2001இல் ஜம்மு கஷ்மீர் சட்டப்பேரவையில் தீவிரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.  13 டிசம்பர் 2001இலே பாரத பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. 

ALSO READ:  ஊடகவாதிகளே... திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள்!

அதாவது அந்த காலகட்டத்தில் 7-8 மாதங்களில் நடந்த சம்பவங்கள் உலகளாவிய அளவில் நடந்த சம்பவங்கள், தீவிரவாத தாக்குதல்கள், பாதகங்கள் அப்பாவி மக்களின் படுகொலைச் சம்பவங்கள், அப்போது… பார்த்தால் ஒருவகையிலே… அமைதியற்ற நிலை.  ஒரு தீப்பொறி போதுமானது அந்தச் சூழல் உருவாகி விட்டது, உருவாகி விட்டது.  இந்தச் சமயத்திலே… திடீரென்று, அக்டோபர் 7 2001இலே, எனக்கு… முதல்வராகும் பொறுப்பு திடீரென்று, என்னிடத்திலே அளிக்கப்பட்டது. 

என்னுடைய மிகப்பெரிய பொறுப்பு என்னவென்றால், குஜராத்திலே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.  அந்த நிலநடுக்கத்திற்கு பிறகான புனர்வாழ்வு மிகப்பெரிய பணி கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நிலநடுக்கம் அது.  ஆயிரக்கணக்கானோர் இறந்து போனார்கள்.  ஆக இந்தப் பணியைச் செய்ய, முதல்வர் என்ற பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.  மிக மகத்துவமான பணி நான் சபதமேற்ற மறுகணமே இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.  நான் எப்படிப்பட்ட நபர் என்றால் எப்போதுமே, அரசோடு எனக்குத் தொடர்பு இருந்ததே கிடையாது.  நான் அரசாங்கத்தில் இருந்ததே கிடையாது.  அரசாங்கம் என்றால் என்ன என்பது தெரியாது.  நான் எம் எல் ஏவாக இருந்தது இல்லை.  நான் தேர்தலில் போட்டியிட்டதே இல்லை.  வாழ்க்கையில் முதன்முறையாக நான் தேர்தலில் போட்டியிட வந்தது.  நான் பிப்ரவரி 24 2002இலே, நான் முதன்முறையாக எம் எல் ஏ ஆனேன்.  ஒரு, தேர்தல் நடந்தது மக்கள் பிரதிநிதி ஆனேன். 

மேலும் நான், முதன்முறையாக, 24ஆம் தேதியன்று, அல்லது 25ஆம் தேதியன்று, அல்லது 26ஆம் தேதியன்று, குஜராத் சட்டப்பேரவையில் கால் ஊன்றினேன்.  பிப்ரவரி 27, 2002இலே, சட்டப் பேரவையில் பட்ஜட் கூட்டத்தொடர் நான் அவையிலே அமர்ந்திருந்தேன்.  அதே நாளன்று, அதாவது எனக்கு, எம் எல் ஆகி மூன்று நாட்கள் ஆகியிருந்தன.   அப்போது கோத்ரா சம்பவம் நடந்தது.  பயங்கரமான சம்பவம் அது.  மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். 

நீங்களே கற்பனை செய்யுங்கள், கந்தஹார் விமானக் கடத்தலாகட்டும் பாராளுமன்றம் மீதான தாக்குதலாகட்டும் அல்லது 9/11 சம்பவமாகட்டும்.  இந்தச் சம்பவங்கள் அனைத்தின் பின்புலம், அதோடு இத்தனை அதிக, எண்ணிக்கையில் மக்கள் இறப்பது, உயிரோடு எரிக்கப்படுவது, நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!!  எதுவும் நடக்க கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம்.   யாருமே விரும்புவார்கள்.  அமைதியே நிலவ வேண்டும். 

ALSO READ:  பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

அடுத்து பெரிய கலவரங்கள் மூண்டதாக ஒரு மாயத்தோற்றம் பரப்பப்பட்டது.  நீங்கள் 2002க்கு முந்தைய தரவுகளைப் பார்த்தீர்களானால், தெரிய வரும், குஜராத்தில் எத்தனை கலவரங்கள் நடந்தன என்பது.  எப்போதும் ஏதாவது ஓரிட த்தில் ஊரடங்கு இருந்து கொண்டே தான் இருக்கும்.  காற்றாடி…. விடும் போது மதக்கலவரங்கள் சைக்கிள் மோதிக் கொண்டு மதக்கலவரங்கள் மூண்டிருக்கின்றன.  2002க்கு முன்பாக…. குஜராத்திலே, 250க்கும் அதிகமான பெரிய கலவரங்களே நடந்திருக்கின்றன. 

மேலும் 1969இலே நடந்த கலவரம், அது சுமார் 6 மாதங்கள் வரை நீடித்தது.  அப்போது நான்…. உலகப்படத்தில் இருக்கவே இல்லை…. அந்தக்காலம் பற்றிக் கூறுகிறேன்.  மேலும், இத்தனை பெரிய சம்பவத்துக்கு இது வடிகாலாக ஆனது.  இதனால், வன்முறை வெடித்தது.  ஆனால், நீதிமன்றம் அதை மிகவும், நுணுகி ஆராய்ந்தது.  அலசிப் பார்த்தது.  அப்போது, எங்களின்… எதிர்த்தரப்பினர் ஆட்சியில் இருந்தார்கள். 

எங்கள் மீது நிறைய குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி தண்டனை, கிடைப்பதை விரும்பினார்கள்.   அவர்களுடைய அயராத முயற்சிகளைத் தாண்டி…. நீதிமன்றங்கள், அதை முழுமையாக ஆராய்ந்து… அலசினார்கள் இருமுறை செய்தார்கள்.   தீர்ப்பு தெளிவுபடுத்தியது.   யாரெல்லாம் குற்றம் செய்தார்களோ, அவர்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை வழங்கின.  ஆனால் மிகப்பெரிய விஷயம், எந்த குஜராத்திலே, ஓராண்டிலே, ஆங்காங்கு கலவரங்கள் நடந்து வந்தன. 

2002க்குப் பிறகு… இன்று 2025.  குஜராத்திலே 20-25 ஆண்டுகளாக, எந்தப் பெரிய கலவரமும் நடக்கவில்லை.  முழுமையான அமைதி நிலவுகிறது.  எங்கள் முயற்சி என்னவாக இருந்த தென்றால், நாங்கள் வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதில்லை. 

நாங்கள் அனைவருடன் அனைவருக்குமான வளர்ச்சி அனைவரின் நம்பிக்கை அனைவரின் முயற்சி, இந்த மந்திரத்தின் துணையோடு பயணிக்கிறோம்.  திருப்திப்படுத்தும் அரசியலிலிருந்து பேரார்வ அரசியலை நோக்கிச் செல்கிறோம்.  இதன் காரணமாக, யார் என்ன செய்ய வேண்டுமோ, அவர்கள் எங்களோடு இணைகிறார்கள்.  நல்லவகையிலே, குஜராத் வளர்ந்த மாநிலமாக ஆக வேண்டும்.  இந்த திசையில் தொடந்து நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.  இப்போது வளர்ந்த பாரதம் நோக்கிய பயணத்தில் குஜராத் தன் பங்களிப்பை அளித்து வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version