ஓசூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து-கார் மோதல்: 5 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில அரசுப் பேருந்து மற்றும் கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில அரசுப் பேருந்து மற்றும் கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற கர்நாடக மாநில அரசுப் பேருந்து காமன்தொட்டி என்னும் இடத்தில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்புகளைத் தாண்டி எதிர்பாதையில் சென்ற டெம்போ மற்றும் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டெம்போ ஒட்டுனர் உட்பட இருவர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கஜ்ப் பட்டுள்ளனர்.