காவிரி மேலாண்மை வாரியம் என்பது ஒரு சடங்கு என்று கூறியுள்ளார் பாமக., நிறுவனர் ராமதாஸ். மேலும், அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக பேரவையில் கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்
தமிழக சட்டப் பேரவையில் இன்று பிற்பகல் தமிழக அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அது, 6 வார காலத்துக்குள் மத்தியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக.,வும் கூறியது. முன்னதாக இதையே ஒரு சாக்காக வைத்து, இன்று காலை நடைபெற்ற பட்ஜெட் உரையை திமுக., கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு அவைக்குச் சென்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், வெளிநடப்பும் செய்து, பட்ஜெட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாகக் காட்டிக் கொண்டது. இருப்பினும் பின்னர் பிற்பகல் நடைபெற்ற தீர்மான நடவடிக்கையில் கார சார விவாதத்தில் ஈடுபட்டதுடன், தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் கூறியது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைகள் எல்லாம் கிச்சு கிச்சு மூட்டுவது போல் நகைச்சுவையாக இருக்கிறது என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் ட்வீட்டியிருக்கிறார்.
அவரது ட்வீட்…
தமிழக சட்டப்பேரவையில் ஒரு சடங்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதைப் போல, எப்படியோ அழுத்தம் தர வேண்டிய விஷயத்தில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை தான் சொல்கிறேன்!

— Dr S RAMADOSS (@drramadoss) March 15, 2018