தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
முன்னதாக, தீ விபத்தில் 90 சதவீத காயமடைந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி சக்திகலா(40)மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி குரங்கணி மலை காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் குரங்கணியிலிருந்து கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் 9 பேர் மலையிலேயே தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
தீயில் சிக்கி படுகாயமடைந்த 16 பேர் மதுரை, கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்து பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர். இந்நிலையில் கிரேஸ்கென்னட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் தேக்கம்பாளையத்தைச் சேர்ந்த சக்திகலா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று நண்பகலில் உயிரிழந்தார்.
அடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.