தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று காலை தமிழகம் வந்தது.
இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டை வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஏராளமானோர் குவிந்து போராட்டம் நடத்தினர். வி.எச்.பி. ரத யாத்திரையை முற்றுகையிட முயன்ற சீமானை போலீசார் கைது செய்தனர். சீமானுடன் போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
ராம ராஜ்யம் என்ற பெயரில் ஒரு ரத்த யாத்திரையை நடுத்துவதற்கான திட்டத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்டாள் பிரச்சினையிலிருந்து பெரியார் சிலையை அகற்றுவது வரை திட்டமிட்ட கலவரத்தை உண்டாக்கும் செயலாக தெரிகிறது. கடவுளின் பெயரால் கலவரத்தை தூண்ட முயிற்சிக்கறது. ராம ராஜ்யம் அமைத்தால் நாங்களும் எங்கள் பாட்டன் , முப்பாட்டன் அதை விட சிறந்த சோழ ராஜ்யம் அமைத்தனர். இதனால் இது அவசியமற்றது.
இங்கு பல மதங்கள் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழும் தமிழ்நாட்டில் இந்த ரத யாத்திரை தேவையற்றது. தீந்தமிழ்நாட்டில் தீய சக்திக்கு என்ன வேலை. இந்த அரசு ரத யாத்திரைக்கு எதிராக தடை போடாமல் போராடும் போராட்டக்காரர்களுக்கு எதிராக தடை போடுகிறது. தடை என்றால் எல்லோருக்கும் தடை தானே . இங்கு நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜகவின் ஆட்சியா?
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கி அதன் மூலமாக அரசியல் நோக்கத்திறகாக தவிர வேறு ஒன்றுமில்லை. இதனால் தான் இந்த ரத யாத்திரை தடுக்க வேண்டும் என்பதற்காக போராடுகிறோம் என்றார்.
2 Attachments