டாஸ்மாக் கடைகளில் உள்ள பீர் வகைகளின் விலையை ரூ.10 உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெடுஞ்சாலை கடைகளின் மூலம் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டவும், வருவாயை பெருக்கவும் இந்த விலை ஏற்றம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் டாஸ்மாக் கடைகளில் பீர் மற்றும் மதுபானங்களின் விலையானது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தண்ணீர் கலக்கப்பட்டு முறைகேட்டில் ஊழியர்கள் ஈடுபடுவதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது பீர் விலை உயர்த்தப்பட்டால் அது குடிமகன்களின் ‘பட்ஜெட்டில்’ பாதிப்பை ஏற்படுத்தும் என குடிமகன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.