சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சொடக்கு போடும் நேரத்திற்குள் இந்த ஆட்சியை என்னால் கவிழ்க்க முடியும் என்று கூறினார். அதற்கு முதல்வர் பழனிச்சாமி, ‘கடப்பாரை கொண்டு நெம்பினாலும் இந்த ஆட்சியை அசைக்க முடியாது’ என்று கூறினார்
இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மு.க.ஸ்டாலினின் சொடக்கு வசனம் குறித்து கூறுகையில், ‘”சொடுக்கு போடுவதில் கூட நடிகர் சூர்யாவை காப்பி அடிக்கிறார் மு.க.ஸ்டாலின் என்றும், “பழமொழியும்; புதுமொழியும் தெரியாமல் ஸ்டாலின் உள்ளதால் அவரை பார்த்து பரிதாபப்படுகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
மாஃபா பாண்டியராஜனுக்கு என்ன பதிலடி ஸ்டாலின் கொடுக்க போகிறார் என்று திமுக தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்