விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டிடம் ஒன்றின் 4 வது மாடியில் இயங்கி வந்த சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இன்று திடீரென தீப்பிடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் உள்ளனர்.
இந்த தீவிபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு படையினர்களின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தீவிபத்தால் உயிர்ச்சேதம் இல்லை எனினும் எவ்வளவு பொருட்சேதம் என்பதை இனிமேல்தான் கணக்கிட வேண்டும் என்று கூறப்படுகிறது
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை தி.நகரில் இயங்கி வந்த சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் நகை மாளிகையின் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு அந்த கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.