ஸ்டெர்லைட்டுக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி சனிக்கிழமையுடன் காலாவதியாகிறது.
தூத்துக்குடியைச் சேர்ந்த விர்ஜின் ஆரோக்கிய பிரைட்டர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாமிர ஆலைக்கான மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி குறித்த தகவல்களை கோரியிருந்தார்.
இதற்கு வழங்கப்பட்ட பதிலில், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி புதுப்பிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி சனிக் கிழமையுடன் காலாவதி யாவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.