உச்ச நீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடு முடிவுறும் தருவாயில் இருந்த நிலையில் 29.3.2018 அன்று அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் தமிழ்நாட்டின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து விரிவாக விவாதித்தேன்.
அக்கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் கால கெடுவுக்குள் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கா விட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மத்திய அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்தக் காலக் கெடு முடிவடைந்த நிலையிலும், மத்திய அரசு இவ்விரு அமைப்புகளையும் அமைக்காத நிலையிலும், 31.3.2018 அன்று இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மத்திய அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
-என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.