நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால் பொதுமக்களை பெரிதும் வாட்டியது. இந்நிலையில் தென் மாவட்டங்களின், சில இடங்களில் மழை பெய்யலாம் என, வானிலை மையம் அறிவித்திருந்தது,
இதனிடையே இன்று மாலை 6.30 மணி அளவில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலொடு கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பத்தை தாங்க முடியமால் தவித்து வந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மழை பெய்துள்ளது.