அப்போ பிரதமருக்கு டீ கிடைக்காதா? என்று கேள்வி கேட்கும் வகையில், தமிழகத்திற்கு மோடி வருகையின் போது கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 11-ம் தேதி கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 11-ம் தேதி கடைகள் அடைக்கப்படும். அரசியல் கட்சியினர் நடத்தும் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை பங்கேற்காது’’ என்றார். ஏப்ரல் 11ம் தேதி தான் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.