தமிழகமே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கூக்குரலை தொடர்ந்து எழுப்பி வரும் வேளையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று ஏற்கெனவே பவானி படுகையில் இருக்கும் கொங்குமண்டலப் பகுதியில் இருந்து பலத்த குரல்கள் எழுப்பப் பட்டு வருகின்றன. அதற்குக் காரணம், தங்களது நீர் பகிர்வு குறையும் என்பதுதான்!
இந்த நிலையில், இன்று போராடுபவர்கள் நாளை ஏமாற்றம் அடைவார்கள் என்ற எச்சரிக்கையுடன் இணையத்தில் உலாவரும் தகவல் இது…
இன்றோ, நாளையோ, அடுத்த நாளோ காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும். அதிலிருந்து எந்த அரசும் பின்வாங்க முடியாது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இன்று கோருபவர்களில் பெரும்பாலானோர் ஒருநாள் வருந்தப்போகிறார்கள். சொல்லப்போனால், அந்த வாரியத்தைக் கலைத்துவிடக் கோரி, நீதிமன்றத்தை அணுகும் நிலையும் வரலாம்!!
கா.மே.வாரியம் அமையும்போது, அனைத்து அணைகள், பாசனப்பகுதிகள், குடிநீர்த் தேவைகள் போன்ற அனைத்தும் வாரியத்தின் கட்டுப்பாட்டில் வரும். அப்போது, பாசனம் செய்யாமல் பாசனம் என்று கணக்குக் காட்டுபவன், குடிநீரை கொள்ளை விலைக்கு விற்றுப் பிழைப்பவன், காவிரியில் கண்மூடித்தனமாக மணல் அள்ளுபவன், காவிரி நீரில் நகரக்கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் போன்றவற்றை கலப்பவன் என்று ஏகத்துக்கும் சிக்குவார்கள். அவர்கள் மீது வாரியம், நீதிமன்ற உதவியுடன் நடவடிக்கை எடுக்கும் நிலை வரலாம்!! கன்னடக்காரனைவிட நகாவிரிம் டமில் பாய்ஸ்தான் இதனால் பெரிதும் பாதிக்கப்படபோகிறார்கள்!!
இன்றைய நிலையில், இது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், நடக்கக்கூடிய வாய்ப்புள்ள தகவல்தான் இது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!!
-Sundararaman Serkadu Nagarajan